Map Graph

லால் பகதூர் சாஸ்திரி மகளிர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்

லால் பகதூர் சாஸ்திரி மகளிர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் என்பது, தென்மேற்கு இந்தியாவின் கேரள மாநிலத்தில் மலபார் கடற்கரையின் திருவனந்தபுரத்தில் உள்ள பெண்களுக்கான பிரத்தியேக முதல் பொறியியல் கல்லூரி ஆகும். கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தால் நிர்வகிக்கப்படும் இரண்டாவது பொறியியல் கல்லூரியான இது கேரள மாநிலத்தில் பெண்களுக்கான ஒரே அரசு பொறியியல் கல்லூரியாகும். லால் பகதூர் சாஸ்திரி பொறியியல் கல்லூரி,காசர்கோடு இம்மையத்தால் நிர்வகிக்கப்படும் இன்னொரு கல்லூரியாகும். கேரளாவின் முதலமைச்சரை ஆட்சிக் குழுவின் தலைவராகவும், அம்மாநில கல்வி அமைச்சரை துணைத் தலைவராகவும் கொண்ட கல்வி மேலாண்மைக் குழுவால் இக்கல்லூரி நிர்வகிக்கப்படுகிறது.

Read article